சென்னை: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் எம்கே தியாகராஜ பாகவதர். தன்னுடைய குரல் வளத்தால் 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்நாட்டை கட்டிப் போட்டவர் இவர். எம்ஜிஆர் உள்ளிட்டவர்களுக்கே மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தவர் எம்கே தியாகராஜ பாகவதர் என்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. மக்களின் அடிப்படை ரசனையான பாட்டும் இசையும் பாடுபவரின் குரல்வழி நம்மை வசீகரிக்கும் வல்லமை படைத்தது.
