மின்சாரம் வழங்கல், எரிபொருள் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது பகிர்ந்தளித்து என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் பணிப்புரைக்கிணங்க வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் உட்பட உணவு அல்லது பானங்கள் அல்லது நாட்டு நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிபொருள் அல்லது பிற தரையிறக்கங்களை உள்ளடக்கிய செயல்முறைகள், களஞ்சியப்படுத்துவதற்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லுதல், விமானநிலையம், துறைமுகம் உட்பட விமானப் பயணிகளுக்கான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளைத் திட்டமிடுதல் மற்றும் நடைமுறைபடுத்துதல் என்பன அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவ்விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி மூன்றாம் திகதியிலிருந்து அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ்வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.