சென்னை: தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு போட்டிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடுதல் போன்ற போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்த போட்டிகள் நடைபெற தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மஞ்சு விரட்டு என்பது, அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டாகும். கோபத்தில் உள்ள காளைகள், ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு […]
