டில்லி வரும் 19 ஆம்தேதி தமிழகம் வர இருந்த பிரதமர் மோடியின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். பாஜக சார்பில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக, வருகிற 19 ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையைத் திறந்து வைப்பதாகவும், பின்னர், […]
