புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள பாரத் ஜோடோ யாத்திரைக்கான இலச் சினை மற்றும் முழக்கத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். பின்னர் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாள ராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து செய்தி யாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கார்கே கூறும்போது, “இந்தக் கேள்வி உங்களில் யார் கோடீஸ்வரர் (கவுன் பனேகா குரோர்பதி) என்பது போல் உள் ளது. அடுத்த 10 முதல் 15 நாட் களில் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும். அதுபற்றி கவலைப் படாதீர்கள்” என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரத மர் வேட்பாளர் பொறுப்புக்கு பொருத் தமானவர் என ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறியிருந்தார்.