சென்னை: தமிழக அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் வரும் 9ந்தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பேருந்து ஸ்டிரைக் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர், பேருந்து ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் போதுமான அளவு பணியாளர்களை நிமிக்காததாலும், இலவச பேருந்துகள் இயக்குவதாலும் ஊதியம் கொடுக்க வழியில்லாமல் […]
