டில்லி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 50 கோடி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் (பிஎம்ஜேடிஒய்) ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, மத்திய நிதி மைச்சர் சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், ”ஜன்தன் யோஜனா இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியது, 50 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 55.5 சதவீத வங்கிக் கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன. 67 சதவீதம் கிராமப்புற/அரை நகர்ப்புற பகுதிகளில் திறக்கப்பட்டது. ஜன்தன் யோஜனா தலைமையிலான தலையீடுகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவை […]
