இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது
சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்படும் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய புனரமைப்பிற்கான அடிக்கல் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் நாட்டி வைக்கப்பட்டது.
இதன்போது பாடசாலைக்காக ஒரு தொகுதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.