2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி வரையான வரையறுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் முன்வைக்கப்பட்ட சகல பட்டியல்களை முழுமையாக செலுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல சபை ஒத்திப்போடும் போதான விவாதத்தில் கலந்துகொண்டு, முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, 2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும் பொது 360 மில்லிய ரூபா நிதிப்பட்டியலாக செலுத்துவதற்கு நிலுவையாகக் காணப்பட்டது.
அப்பட்டியல் உட்பட 2023.12.15ஆம் திகதி வரையான வரையறுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் முன்வைக்கப்பட்ட சகல பட்டியல்களையும் முழுமையாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக ஓய்வுபெற்றவர்களுக்காக செலுத்தப்படும் நன்கொடைக்காக 2023ஆம் ஆண்டு ஆரம்பமாகும் போது காணப்பட்ட 15மாத நிலுவைத்தொகை, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி வரையான மொத்த நன்கொடையை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக 48 பில்லியன் ரூபா வரையான நிதி விலக்கழிக்கப்பட்டுள்ளது. மேலும், சமுர்த்தி, விசேட தேவையுடைய, முதியோர்களுக்காக மற்றும் சிறுநீரக
நோயாளர்களுக்காக வழங்கப்படும் நிதியுதவிகளுக்காக 2023 இலை 184மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.