இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இந்த அணிக்கு வனிந்து ஹசரங்க தலைவராகவும், சரித் அசங்க உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடல் தகுதியின் அடிப்படையில் பெதம் நிஸ்ஸங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே ஜனவரி 16 மற்றும் 18ஆம் திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Sri Lanka Squad –
- Wanindu Hasaranga – Captain
- Charith Asalanka – Vice Captain
- Kusal Mendis
- Sadeera Samarawickrama
- Kusal Janith Perera
- Angelo Mathews
- Dasun Shanaka
- Dhananjaya de Silva
- Kamindu Mendis
- Pathum Nissanka – subject to fitness
- Maheesh Theekshana
- Dushmantha Chameera
- Dilshan Madushanka
- Matheesha Pathirana
- Nuwan Thushara
- Akila Dananjaya