சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று ஆளுநர் வருவதாக தகவல் வெளியான நிலையில், அங்கு இன்று காவல்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான முறைகேடு புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று திடீரென மீண்டும் பெரியார் பல்கலைக்கழகம் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு இன்று செல்ல உள்ள நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி மற்றும் முறைகேடு […]
