தேவாலய விவகாரம்: அண்ணாமலை மீது ’பொது அமைதியை கெடுத்தல்’ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் `என் மண் என் மக்கள்’ நடைபயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டியில் லூர்துபுரத்தில் உள்ள லூர்து அன்னை ஆலயத்திற்கு தனது கட்சிக்காரர்களுடன் சென்றுள்ளார். அங்கு அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என்று கிறிஸ்துவ இளைஞர்கள் சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

`புனிதமான இடத்தில் நீங்கள் வந்து மாலை போடக்கூடாது..!’ என்றனர். அதற்கு அண்ணாமலை, `எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்தேன்’ என்றார். அதற்கு இளைஞர்கள், `எல்லோரும் நல்லா இருக்கணும் என்று கூறும் நீங்கள் கிறிஸ்துவ மக்களை வதைப்பது ஏன்? பின்தங்கிய மக்களுக்கு மத்திய அரசின் சலுகைகளை வழங்க மறுப்பது ஏன்?’ என்று கேள்விகளை அடுக்கடுக்காக முன் வைத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இலங்கையில் 2009-ம் ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் இறந்தபோது, நீங்கள் எங்கே போனீர்கள். கட்சிக்காரர்கள் சிலரின் தூண்டுதல் காரணமாக, நீங்கள் இப்படி செய்கிறீர்கள். இங்கே என்னை வரக்கூடாது என்று தடுப்பதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது.

Bjp மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று தேனி மாவட்டத்தில்

இந்த ஆலயம் உங்கள் பெயரில் இருக்கிறதா.. நான் தர்ணாவில் ஈடுபட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?’ எனக் கேட்டார். அதற்கு இளைஞர்கள் இங்கு வரக்கூடாது.. இது எங்களுக்கான ஆலயம் என்று கூறினர். அப்போது அண்ணாமலையுடன் சரிக்கு சரியாக வாக்குவாதம் செய்த இளைஞர் ஒருவர் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.. அப்போது சிலர், `அண்ணாமலை வெளியே போ… பிஜேபியே வெளியே போ…’ என்று கோஷமிட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதில், `கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரத்தை ஏற்படுத்துவது, பொது அமைதியை குலைப்பது, பொது அமைதிக்கு எதிராக பேசுவது’ என, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மற்றொரு பக்கம் அண்ணாமலையுடன் பிரச்னையில் ஈடுப்பட்ட கார்த்திக் எனும் நபர் திமுக இளைஞர் அணியைச் சார்ந்தவர் என்றும், அமைச்சர் உதயநிதியும் அவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் திமுக தான் இதனை திட்டமிட்டு பிரச்சனையை கிளப்பிவிட்டதாக பாஜக-வினர் தெரிவிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.