IND vs AFG: ஜிதேஷ் சர்மாவா? சஞ்சு சாம்சனா? ரோஹித் எடுத்த முக்கிய முடிவு!

India vs Afghanistan: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 சர்வதேச போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வியாழக்கிழமை இன்று மொஹாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் 1வது டி20 போட்டியில் விராட் கோலி விளையாடமாட்டார் என்று அதிகார்வப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார்கள் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். மேலும் இன்றைய போட்டியில் ஷுப்மான் கில் இடம் பெற முடியாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 அணியில் இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சனுக்கு இந்தியா ப்ளேயிங் 11-ல் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகி உள்ளது.

மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ஷிவம் துபே மற்றும் ரின்கு சிங் ஆகியோரும், அதைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மாவும் இருக்கலாம். அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களாகவும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் இருக்க வாய்ப்புள்ளது.  கில் விளையாட வேண்டும் என்றால் சிவம் துபே வெளியேற வேண்டும்.  அதே நேரத்தில் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்றால் ஜிதேஷ் சர்மா வெளியேற வேண்டும்.  இப்படியான இக்கட்டான சூழ்நிலையில், ரோஹித் சர்மா இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவை அணியில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.  இதுவரை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையில் 5 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது.  அதில் 4ல் இந்தியா வென்றுள்ளது மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. 

இந்தியாவின் உத்ததேச அணி: ரோஹித் சர்மா, யஷவி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய்/குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான் உத்ததேச அணி: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கே.), கரீம் ஜனத், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, நவீன்-உல்-ஹக், குல்பாடின் நைப், ஃபசல்ஹாக் ஃபாரூக்கி, முஜேபுல்லா ரௌகி, முஜேபுல்லா ரௌகி.

டி20 தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய். , குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (WK), இக்ரம் அலிகில் (WK), ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்ஜாய், ஷரஃபுதினாஸ்ராஃப், முஹம்மது நபி ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.