"ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமை!" – `கேப்டன் மில்லர்' படத்தைப் பாராட்டிய அமைச்சர் உதயநிதி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள `கேப்டன் மில்லர்’. இந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுவருகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் நடக்கும் இந்தக் கதையில் சாதாரண இளைஞனான அனலீசன் (தனுஷ்) எப்படி ஒடுக்குமுறையால் ‘கேப்டன் மில்லர்’ எனும் அவதாரம் எடுக்கிறான் என்பதைக் குறித்து படம் பேசுகிறது. படத்தின் அரசியல் தொடர்பான காட்சிகள், ஸ்டன்ட் மற்றும் மேக்கிங் உள்ளிட்ட விஷயங்களுக்காகப் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தில்

படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து தனது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தினைப் பாராட்டி தனது ‘x’ வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அப்பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பைச் சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும், நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என்று பாராட்டியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.