சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த நல்ல நாளில், பொங்கல் விழா அன்று புதுப்பானையில் பச்சரிசி வெல்லம் கலந்து பொங்கல் வைத்து உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன்