இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 ஜனவரி 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2024 ஜனவரி 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யுக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.