Jio recharge plan: குடியரசு தினத்திற்கான சிறப்பு அறிவிப்பில், ஜியோ வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் தினம் ரூ.2,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் திட்டமானது சந்தாதாரர்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் சராசரி மாதச் செலவு ரூ. 230 ஆகும், இது பயனர்களுக்கு செலவு குறைந்த மற்றும் விரிவான மொபைல் அனுபவத்தை வழங்குகிறது. இந்தச் சலுகையை மேலும் கவர்ந்திழுக்கும் வகையில், மை ஜியோ ஆப் மூலம் ஜனவரி 15 முதல் ஜனவரி 30 வரை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஜியோ கூடுதல் சலுகைகளை வழங்க உள்ளது. இது குடியரசு தினத்திற்கான சிறப்பு ஆபர் ஆகும்.
குடியரசு தின சலுகையின் கீழ், ஜியோ பயனர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு 10% தள்ளுபடியில் இருந்து பயனடையலாம். இதற்கு தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பு ரூ. 5,000-க்கு அதிகமாக இருக்க வேண்டும், அதிகபட்ச தள்ளுபடி ரூ.10,000 ஆக இருக்கும். அதாவது ரூ.1,00,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள கேஜெட்களை வாங்குபவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடியுடன் கணிசமான சேமிப்பு கிடைக்கும். மேலும், ஜியோ தனது ஆபர்களை தலா ரூ.125 மதிப்புள்ள இரண்டு ஸ்விக்கி கூப்பன்களுடன் விரிவுபடுத்துகிறது, ரூ. 299க்கு மேல் ஆர்டர் செய்தால் ரிடீம் செய்ய முடியும்.
கூடுதலாக, பயனர்கள் இக்ஸிகோ கூப்பனைப் பெறுவார்கள், இது விமான டிக்கெட் விலையில் ஆபர்களை வழங்குகிறது. மூன்று பேர் கொண்ட குழுவிற்கு, 1500 ரூபாய், இரண்டு பயணிகளுக்கு, 1000 ரூபாய், ஒரு டிக்கெட்டுக்கு 500 ரூபாய் ஆகும். குடியரசு தின ஆஃபரில் ரூ.2,499க்கு மேல் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் மதிப்புள்ள அஜியோ தள்ளுபடி கூப்பனும் கிடைக்கும். மேலும், சந்தாதாரர்கள் ரூ. 999க்கு மேல் மதிப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30% தள்ளுபடியை அனுபவிக்க முடியும், அதில் தள்ளுபடி ரூ.1,000 வரை இருக்கும்.
ஜியோவின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்கள் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகைக்கு அப்பால் நீட்டிக்கப்படுகின்றன, இதில் ரூ.3,662, ரூ.3,226, ரூ.3,225, ரூ.3,227 மற்றும் ரூ.3,178 ஆகிய விலைகள் உள்ளன. இந்த திட்டங்கள் பல்வேறு OTT சந்தா சேவைகளுடன் வருகின்றன. அனைத்தையும் உள்ளடக்கிய பேக்கேஜை விரும்புவோருக்கு, 4498 ரூபாய்க்கு 14 OTT சந்தாக்கள் அடங்கும், இதில் பிரைம் வீடியோ மொபைல், ஹாட்ஸ்டார் மொபைல், நெட்ஃபிக்ஸ் மற்றும் பல பிரபலமான தளங்களை உள்ளடக்கியது.
ஜியோவின் குடியரசு தின ஆஃபருடன், பயனர்கள் ஒரு வருட கால இணைப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் கூப்பன்களையும் அனுபவிக்க முடியும், இது ஜியோ சந்தாதாரர்களுக்கு சேமிப்பின் கொண்டாட்டமாக அமைகிறது. ஜியோவின் சிறப்பு குடியரசு தின ரீசார்ஜ் திட்டத்துடன் இந்த வரையறுக்கப்பட்ட பலன்களைத் தவறவிடாதீர்கள் மற்றும் உங்கள் மொபைல் அனுபவத்தை மேம்படுத்துங்கள்.