
காதலரை அறிமுகப்படுத்திய சாய் பல்லவியின் தங்கை
நடிகை சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரின் தங்கை பூஜா கண்ணன். சமுத்திரகனி நடித்த ‛சித்திரை செவ்வானம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், அதன் பிறகு எந்த படத்திலும் இதுவரை நடிக்கவில்லை.
இந்த நிலையில் பூஜா கண்ணன் காதலில் விழுந்துள்ளார். தனது காதலையும் அறிமுகம் செய்துள்ளார். இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வினீத் என்பவருடன் காதலில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். கூடுதலாக, இதுவரை கிரைம் பார்ட்னர் ஆக இருந்தவர் தற்போது லைப் பார்ட்னர் ஆக மாறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.