அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையில் அவசர அனர்த்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்று(18) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களினால் இராணுவ மற்றும் கடற்படை கட்டளை தளபதிகளிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், அனர்த்த முகாமை துவ உத்தியோகத்தர்கள் மற்றும் ராணுவ கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.