விசாகப்பட்டினம்: ஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகாரைத் தொடர்ந்து நாட்டில் 2-வது மாநிலமாக ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது. நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான் இன்றளவும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
Source Link
