சூப்பர்ஹீரோ திரைப்படங்கள், பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான கார்டூன் நிகழ்ச்சிகள் என அனைத்தையும் 3 மாதங்களுக்கு இலவசமாகப் பார்க்க விரும்புகிறீர்களா? ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான ப்ரீப்பெய்ட் திட்டத்தில் இப்போது சாத்தியம். ஜியோவின் ரூ.388 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. கூடுதலாக, இந்தத் திட்டத்தில் 3 மாத இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் வழங்கப்படுகிறது.
ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான் விலை
இந்த திட்டத்தைப் பெற, நீங்கள் உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் ரூ.388 மதிப்புள்ள ரிசார்ஜ் செய்வதன் மூலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாகப் பெறலாம். இந்த சந்தா 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும், அதாவது 90 நாட்கள். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், நீங்கள் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) அனைத்து திரைப்படங்களையும், காஃபி வித் கரண், ராஜா ராணி, தர்பார், பிக்பாஸ் போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்கான உள்ளடக்கங்களையும் காணலாம்.
12 நாட்களுக்குள் ரீச்சார்ஜ்
இந்த சலுகை ஜனவரி 31, 2024 வரை மட்டுமே இருக்கும். எனவே, இந்த சலுகையைப் பெற விரும்பினால், தாமதிக்காமல் உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் ரூ.388 மதிப்புள்ள ரிசார்ஜ் செய்யுங்கள். OTT நன்மையாக, இதன் மூலம் ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு 3 மாதங்கள் வரை இலவச Disney + Hotstar மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. திட்டத்தில் இருந்து ரீசார்ஜ் செய்த பிறகு, உங்கள் மொபைல் சாதனத்தில் Disney + Hotstar பயன்பாட்டைத் திறந்து, நீங்கள் ரீசார்ஜ் செய்த அதே எண்ணிலிருந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி மற்றும் படங்களை தனித்தனியாக பணம் செலுத்தாமல் பார்க்க முடியும்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் பலனையும் பெறுங்கள்
உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், வரம்பற்ற 5ஜி டேட்டாவின் பலன் உங்களுக்கு வழங்கப்படும். 239 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள அனைத்து திட்டங்களிலிருந்தும் ரீசார்ஜ் செய்யும் போது அன்லிமிட்டெட் 5G நன்மையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது.