இதுவரையிலும், சின்னம்மை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலானவர்கள், சின்னம்மை தடுப்பூசியை அருகில் உள்ள வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ். எம். ஆர்னோல்ட் தெரிவித்தார். தெரிவித்தார்
.06-09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு சின்னமம்மை நோயின் மேலதிக டோஸ் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கான கவரேஜை அதிகரிப்பது தொடர்பாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.
06-09 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சின்னம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத பிள்ளைகளும் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறிய விசேட வைத்திய நிபுணர் எஸ். எம். ஆர்னோல்ட சின்னம்மை தடுப்பூசி பெறாத ஒரு குழுவும், மற்ற நோய்களுக்கான தடுப்பூசி பெறாத ஒரு குழுவும் இருக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக தடுப்பூசிகள் போடப்படாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அத்துடன், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் நிபுணர் வலியுறுத்தினார்.