பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்த பின், பிரதமர் பேசுகையில், ”பயனாளிகளுக்கு கட்டித் தரப்பட்டுள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். அனைத்து வசதிகளும் அந்த வீடுகளில் உள்ளன. நான் குழந்தையாக இருந்தபோது, இது போன்ற வீட்டில் வாழ வாய்ப்பு கிடைக்காதா என ஆசைப்பட்டேன். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் இப்போது நனவாகி இருப்பதை காணும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். அவர்களின் ஆசிர்வாதமே எனக்கு மிகப் பெரிய சொத்து,” என்றார். அப்போது அவரது குரல் தழுதழுத்தது. கண்கள் கசிந்து, உணர்சி பெருக்குடன் காணப்பட்டார், பிரதமர்.
உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement