கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் உள சமூக, வாழ்வாதாரமேம்பாடு,இழப்பீடுகள் தொடர்பான கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் IOM நிறுவன பங்களிப்புடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.முரளிதரன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி இ.நளாஜினி,IOM நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விடயத்தோடு தொடர்புடைய மாவட்டச்செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.