
அரேபியன் குயினாக மாறிய எதிர்நீச்சல் நந்தினி! வைரலாகும் போட்டோஸ்
எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் கைத்தட்டல்களை பெற்று வருகிறார் ஹரிப்ரியா இசை. சீரியல் நடிகையாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திறமையை வெளிக்காட்டி வரும் ஹரிப்ரியாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை அள்ளிக்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஹரிப்ரியா தற்போது தனது துபாய் டூர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில், அரேபியா இளவரசி போல் ஆடையணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.