சென்னை பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்பு ராமர் கோவில் குடமுழுக்கில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார். நாளை மறுநாள் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்படப் பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். கோவில் குடமுழுக்கையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடியின் கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப […]