ஷகீலாவை தாக்கிய வளர்ப்பு மகள் ; போலீஸில் பரஸ்புரம் புகார்

90களில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை ஷகீலா. அதன்பிறகு சமீப காலமாக அது போன்ற படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷகீலா, படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதுடன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வது மூலமாக தனது புதிய முகத்தை காட்டி வருகிறார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாத ஷகீலா, தனது சகோதரர் மகள் ஷீத்தல் என்பவரை சிறுவயதிலிருந்தே தனது வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஷகீலாவுக்கும் ஷீத்தலுக்கும் இடையே சிறு பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு ஷீத்தல், ஷகீலாவின் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். இதனை தொடர்ந்து தனது வழக்கறிஞர் சவுந்தர்யா மூலமாக இந்த பிரச்னையை பேசி தீர்ப்பதற்காக ஷகீலா முயன்றார். அப்போது நேற்று ஷகிலாவின் வீட்டிற்கு வந்த சவுந்தர்யா, மீண்டும் திரும்பி வந்த ஷீத்தல் மற்றும் அவரது நிஜமான தாயார் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதில் ஒரு கட்டத்தில் ஷீத்தல் அருகில் இருந்த ட்ரே ஒன்றை எடுத்து ஷகீலாவை தாக்கியுள்ளார். அவரது தாயார், வழக்கறிஞர் சவுந்தர்யாவின் கையை கடித்துள்ளார். இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஷகீலாவும் ஷீத்தலும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ளனர். ஷகீலா வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் இந்த புகார் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோடம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.