புதுடெல்லி: சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் இரவு 11 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சீனாவை தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 11ம் தேதி ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டது. தொடர்ந்து நேற்று (ஜன.22) காலை தென்மேற்கு சீனாவின் மலை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Earthquake of Magnitude:7.2, Occurred on 22-01-2024, 23:39:11 IST, Lat: 40.96 & Long: 78.30, Depth: 80 Km ,Location: Southern Xinjiang, China for more information Download the BhooKamp App https://t.co/FYt0ly86HX@KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/E184snmSyH
— National Center for Seismology (@NCS_Earthquake) January 22, 2024