
சலார் – பிரபாஸ் பேசிய மொத்த வசனங்கள் இவ்வளவுதானா?
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பான் இந்தியா படம் 'சலார்'. இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸ் மிகக் குறைவான வசனங்களே பேசியிருக்கிறார் என ஒரு ரசிகர் படம் வெளிவந்த போதே குறிப்பிட்டிருந்தார். “சலார்' படத்தில் பிரபாஸ் 100 முதல் 110 வரிகள் அதாவது ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் வசனமே பேசியிருக்கிறார். தோராயமாக 3 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே அந்த வசனங்கள் இருக்கும்,”.
ஓடிடியில் வந்த பிறகு அதே ரசிகர் பிரபாஸ் பேசிய வசனங்களை எடிட் செய்து ஒரு வீடியோவாகவே வெளியிட்டுள்ளார். “சலார்' படத்தில் பிரபாஸ் பேசிய வசனங்கள் தோராயமாக 4 நிமிடங்கள் மட்டுமே சில இடைவெளிகளுடன் வருகிறது. இடைவெளியில்லாமல் 2 நிமிடம் 35 வினாடிகள் இருக்கிறது,” என கணக்கிட்டு சொல்லியிருக்கிறார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாம் பாகத்திலாவது இரண்டு பக்கங்களுக்கு மேல் வசனம் பேசுவாரா பிரபாஸ் ?.