கோறளைப்பற்று மத்தி மாவடிச்சேனையில் 2023ம் ஆண்டின் சமுர்த்தி திணைக்கள நிதியொதுக்கீட்டிலும் பயனாளி மற்றும் மக்கள் பங்களிப்பிலும் கட்டி முடிக்கப்பட்ட சமுர்த்தி ரன்விமன வீடு உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சி றமீஸா, மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் எம்.எஸ்.பசீர், மாவட்ட செலக சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் மனோகிதராஜ், கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.பஷீர், வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், கிராம சேவை உத்தியோகத்தர் ஜே.ஜெஸ்ரின், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கபீர், வங்கிச்சங்க சபைத்தலைவர் ஏ.பி.காதர் முகம்மட், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் சி.எம்.எஸ்.இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.