
சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'சைரன்'. கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், சாந்தினி தமிழரசன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என தெரிவித்த இப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஓடிடி ரிலீஸ் என்றார்கள். பிறகு தியேட்டரிலேயே ரிலீஸாகும் என தகவல் வந்தது. இந்த நிலையில் சைரன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.