“பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலம் தொடர்பான மனுக்கள்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (ஜன. 23) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

“நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” சட்டமூலம் தொடர்பான மனுக்கள்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகளும் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இலங்கையின் மலையக தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்துக்கு அனுமதி

கௌரவ வேலுகுமார் மற்றும் 21 உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள எழுத்துமூலமான கோரிக்கையின் பேரில் “இலங்கையின் மலையக தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தை” (Caucus for the Evolution of Malaiyaga Plantation Community in Sri Lanka) தாபிப்பதற்காக 2024 ஜனவரி 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.