பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதற்கமைய, அதிபர்களினூடாக நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் nரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் மாத்திரமே, தரம் 06 க்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கு தரம் 01, 05 மற்றும் 06 தவிர்ந்த ஏனைய இடைநிலை வகுப்புகளுக்கு ( உயர்தரம் உள்ளிட்ட) மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான உரிய விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்ப்பட வேண்டும் என்பதுடன், உரிய பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுமிடத்து, கல்வி அமைச்சின் சுற்றிக்கைக்கு அமைவாக அதிபர்களினால் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு, தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களின் பெயர் பட்டியல் கல்வி அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்காக அனுப்பப்படும்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டின் வகுப்புக்களுக்கான மாணவர்களை இணத்துக்கொள்ளும் விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கோ அல்லது உரிய பாடசாலைகளுக்கோ அனுப்புவதை தவிர்த்துக்கொள்மாறும், அவ்வாறு அனுப்பப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கடிதங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட மாட்டாது என்றும் கல்வி அமைச்சு வெளியட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.