பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஏற்றுமதி வலைய பிரிவில் கடற்றொழில் திணைக்களத்தின் உப காரியாலயம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கடலுணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரங்களை கடற்றொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்வது வழமையான நடவடிக்கை என்றபோதும், ஏற்றுமதியின்போது அவசரமாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தேவைகளை செய்வதற்கு கால விரையத்தையும், பதற்றங்களையும் தவிர்ப்பதற்கு வசதியாக குறித்த உப அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று திறந்துவைத்தார்.
இத்திறப்பு விழாவில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.