2024 பெப்ரவரி 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள, நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான போக்குவரத்து திட்டத்தை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல்; வரையும், செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் இந்த வீதிகள் மூடப்படும்.
பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் மறுநாள் (04) சுதந்திர தின விழா முடிவடையும் வரை இது அமுலில் இருக்கும் என்று பொலிஸார் விடுத்துள்ள போக்குவரத்துத் திட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.