சென்னை இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் இருக்கலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் குளிர் நிலவுகிறது. டில்லி உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனி மூட்டம் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மலைப் பிரதேசங்களில் தொடர்ந்து பனி மூட்டம் உள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”29-01-2024 மற்றும் 30-01-2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். […]
