IND vs ENG: முதல் டெஸ்ட் தோல்வி! இந்த 3 வீரர்களை வெளியேற்றும் இந்திய அணி!

India vs England 1st Test: முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்தது.  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் மூன்று நாட்கள் இந்தியாவின் பக்கமே இருந்தது.  எளிதாக இங்கிலாந்தை வென்று விடலாம் என்றும் இந்திய அணி இருந்த நிலையில், எதிர்பாராமல் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வெறும் 246 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், இந்தியா 436 ரன்களை குவித்தது. அஷ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் போன்ற திறமையான ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் லீட் கொடுக்க முடியாது என்று அனைவரும் நினைத்தனர்.  

It came right down to the wire in Hyderabad but it’s England who win the closely-fought contest.#TeamIndia will aim to bounce back in the next game.

Scorecard  https://t.co/HGTxXf8b1E#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/OcmEgKCjUT

— BCCI (@BCCI) January 28, 2024

ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் சிறப்பாக ஆடி நல்ல ரன்களை குவித்தது.  ஒல்லி போப் 196 ரன்கள் அடித்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 420 ரன்கள் அடிக்க உதவினார். இதன் மூலம் இந்தியாவுக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சேஸிங் செய்ய ஈஸியான டார்கெட் என்றாலும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.  இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் இந்திய மண்ணிலும் ரன்கள் அடிக்க போராடி வருகின்றனர். குறிப்பாக ஷுப்மான் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். 

மேலும், தனிப்பட்ட காரணங்களால் முதல் இரண்டு டெஸ்டில் இருந்து விராட் கோலி விலகியதால், கடைசி வரை நின்று பேட்டிங் செய்ய ஆட்கள் இல்லாமல் போனது.  முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இந்தியா சில மாற்றங்களை செய்யலாம். ஷுப்மான் கில் தொடர்ந்து சரியாக விளையாடாததால், அவருக்கு பதில் அணியில் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்படலாம். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக டெஸ்டில் இந்தியா ஏ அணிக்காக ரஜத் படிதார் இரண்டு சதங்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் சரியாக விளையாடவில்லை என்றாலும், பிப்ரவரி 2 முதல் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

மேலும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்தின் பேட்டிங் ஏற்று கொள்ளும் வகையில் இல்லை என்றாலும், கே.எல்.ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்பதால் இரண்டாவது டெஸ்டிலும் பாரத் விக்கெட் கீப்பராக தொடருவார். ஜடேஜாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் அவருக்கு பதில் குல்தீப் விளையாட வாய்ப்புள்ளது.  அஷ்வின், அக்சர், குல்தீப் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட லெவன்: ரோஹித் சர்மா (C) யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (wk), கே.எஸ்.பாரத் (wk), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ் ஜஸ்பிரித் பும்ரா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.