விமானத்தில் உள்ளாடைகள், காண்டம்; ஊழியரின் அதிர்ச்சியான பணி அனுபவம்

நியூயார்க்,

அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர், அவருடைய 25 ஆண்டு கால பணி அனுபவங்களை ரெட்டிட் வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில், பல சுவாரசிய மற்றும் அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்து உள்ளார். எது வேண்டுமென்றாலும் என்னிடம் கேளுங்கள் என்ற தலைப்பில், ரெட்டிட்டில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில், விமானத்தில் அதிக வெறுப்புணர்வை தூண்டுகிற விசயம் என்னவென்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில், பயன்படுத்தப்பட்ட காண்டம்கள், அழுக்கடைந்த உள்ளாடைகள் (ஆண் மற்றும் பெண்) பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் ஆகியவற்றை பார்த்திருக்கிறேன்.

விமான ஊழியரின் மனஉளைச்சலுக்கு ஒழுங்கீன பயணிகள் சிலரே காரணம் என கூறியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் கழிவறையில் சிகரெட் புகைக்க முயற்சித்த நபர்களை தடுத்து, பிடித்திருக்கிறேன்.

ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை குடிபோதையில் தகராறு செய்ய கூடிய பயணிகளையும் பார்த்திருக்கிறேன். அடிக்கடி அல்ல. ஆனால், எந்த நகரங்களுக்கு நீங்கள் பயணிக்கிறீர்கள் உள்ளிட்டவற்றையும் அது சார்ந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, லாஸ் வேகாசுக்கு செல்கிறீர்கள் என்றால், விமானத்தில் குடிபோதையில் ஏற முயற்சிக்கும் பயணிகள் நிறைய பேர் உள்ளனர் என எழுதி இருக்கிறார்.

சில பயணிகள் சண்டையிடுவதும், இருக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட அசவுகரிய விசயங்களை செய்வதும் கூட பணி அனுபவத்தில் நடந்திருக்கிறது. ஒரு சமயம், பயணி ஒருவர் அவர் மீது எச்சில் துப்ப முயற்சித்து இருக்கிறார் என்று விவரிக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.