இந்திய ஆக்கி வீரர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

பெங்களூரு,

இந்திய ஆக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஆக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். 2021-ல் அர்ஜுனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.