சென்னை: சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜெயலட்சுமி. இவர், மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், தொலைபேசியில் மர்ம நபர் ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறியுள்ளார். அண்ணாநகர் மேற்கு வெல்கம் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரபல நடிகை ஜெயலட்சுமி.
