வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபான கொள்கை நிறைவேற்றியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று அமலாக்கத்துறையினர் டில்லியில் ரெய்டு நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பைபவ்குமார், ஆம்ஆத்மியின் பொருளாளரும், எம்பியுமான குப்தா வீடு , அலுவலகங்கள், உள்பட 12 இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. நீர்வளத்திட்டத்தில் கான்ட்ராக்ட் முறைகேடு நடந்திருப்பதாவும் இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
மிரட்டும் நோக்கமா ?
இது தொடர்பாக டில்லி அமைச்சர் அதிஷீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைப்புகள் மூலம் எங்கள் கட்சியை அடக்க பா.ஜ., விரும்புகிறது. ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக, ஆம்ஆத்மி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
மதுபான ஊழல் என்ற பெயரில் யாரோ ஒருவரது வீடு ரெய்டு செய்யப்படுகிறது, ஒருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ரெய்டுகளுக்குப் பிறகும், அமலாக்கத்துறையால் ஒரு ரூபாயைக் கூட மீட்க முடியவில்லை. அவர்களால் எந்த உறுதியான ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை, மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றமும் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement