அடுத்த 5 மாதங்களுக்கு நோ ரெஸ்ட்! இந்திய அணி விளையாடும் தொடர்கள்!

India tour of Zimbabwe: 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் தொடங்குகிறது.  இதன் இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் தேதி பார்படாஸில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடைபெற உள்ளது. 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி முடிந்த ஒரு வாரத்திற்குள் டி20 உலக கோப்பை போட்டிகள் தொடங்குகிறது.  இந்நிலையில், உலக கோப்பை முடிந்த அடுத்த 7 நாட்களில் இந்தியா ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து 5 மாதங்கள் விளையாட உள்ளது.  இந்த ஆண்டு வீரர்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையை இன்னும் அறிவிக்கவில்லை.  இருப்பினும் மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3 மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி, இறுதிப் போட்டியானது மே கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இவை ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது.

India Tour of Zimbabwe

July 2024
 T20Is 
Harare

More details  https://t.co/lmtzVUZNCq#TeamIndia | #ZIMvIND pic.twitter.com/CgVkLS8JIB

— BCCI (@BCCI) February 6, 2024

இந்தியாவின் முதல் போட்டி அயர்லாந்திற்கு எதிராக ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது.  டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்ற ஒரு வாரத்தில் இந்திய அணிக்கு அடுத்த தொடர் தயாராக உள்ளது.  ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடர் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7, ஜூலை 10, ஜூலை 13 மற்றும் ஜூலை 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த ஐந்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2022ம் ஆண்டு இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. மேலும் 8 ஆண்டுகளுக்கு முன் 2016ல் டி20 போட்டியில் விளையாடியது. 

“உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பங்களிப்பதில் பிசிசிஐ எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. இது ஜிம்பாப்வே அணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த நேரத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு எங்கள் ஆதரவு தேவை. இந்த சுற்றுப்பயணம் மற்றும் சக கிரிக்கெட் வாரியங்களை ஆதரிப்பதில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. இருதரப்பு கிரிக்கெட்டை வலுவாகவும், வணிக ரீதியாகவும் சாத்தியமானதாக மாற்ற பிசிசிஐ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்” என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.