கல்வித் துறையில் பல பதவிகளில் காணப்படும் பெரும்பாலான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
அதற்கிணங்க கல்வி நிருவாகம், அதிபர், ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், போன்ற சேவைகளில் மற்றும் ஆசிரியர் சேவையில் புதிய நியமனங்கள் பல மிக விரைவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் இது தவிர பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் காணப்படும் சேவை நிலையங்களில் இடமாற்றங்களை வழங்குவதன் ஊடாக உத்தியோகர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
வாட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களில் கல்வித்துறையின் அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகளைத் தெளிவுபடுத்துவதற்காக கல்வி அமைச்சரின் தலைமையில் வவுனியா கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இது தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் எதிர்காலத்தில் மிகவும் குறைந்த காலத்திற்குள் கல்வி நிருவாக சேவையில் 460 நியமனங்களை வழங்குவதற்கு அவசியமான உடனடி ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவ்வாறே சட்ட நடவடிக்கைகளால் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் தேங்கிக் காணப்படும் அதிபர் சேவையில் புதிய நியமனங்கள் 4,672 தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4,400 அதிபர்கள் தற்போது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இளம் சந்ததியினரின் பலத்துடன் புதிய நியமனங்களைப் பெறுபவர்கள் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் குறைந்தது மூன்று வருடங்களாவது பணியாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் புதிய நியமனம் பெறுபவர்களின் நியமனங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக சிக்கல்கள் கலந்துரையாடப்பட்டு பொது உடன்பாட்டிற்கு வருவதற்காக சகல தரப்பினரும் கலந்துகொள்ளும் இரண்டு நாள் நிகழ்ச்சி கொழும்பில் இடம்பெறுவதாகவும் அதன்போது எடுக்கப்படும் பொதுத் தீர்மானத்திற்கு இணங்க அதிபர் சேவையில் ஏனைய நியமன தாரிகளுக்கும் பணியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை வழங்குவதுடன், அதிகாரிகள் தாம் பணிபுரியும் இடங்களில் பற்றாக்குறை காணப்படும் இடங்களுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விபரித்தார்.
ஆசிரிய பயிற்றுனர் சேவையில் புதிய 700 நியமனங்கள் இடம்பெறவுள்ளதுடன் புதிய ஆசிரிய ஆலோசகர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இரசாயன விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பவியல் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற பாடங்களுக்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு பரீட்சைகள் நடாத்தப்பட்டு 5,500 பேரளவில் புதிய ஆசிரியர்கள் ஆசிரிய சேவைப் பிராமணர்களுக்கு இணங்க ஆட்சேர்ப்புச் செய்வதற்கு உத்தேசிப்பதாகவும் மாகாண மட்டங்களில் அந்நியமனங்களை வழங்குவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய பாடசாலைகளுக்காக மாத்திரம் பரீட்சைகளை நடாத்தி எதிர்வரும் சில வாரங்களுக்குள் அவ்வாட்சேர்ப்புக்கள் இடம்பெறும் என்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
இதன்போது பேராசிரியர் சிவா சிவநாதன், வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.