
முத்தழகை சூழ்ந்து கொண்ட கிராமத்து பெண்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு தொடரில் கிராமத்து கதாநாயகியாக டிக் டாக் பிரபலம் ஷோபனா நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஷோபனாவுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில், ஷோபனா அண்மையில் சென்னை திருவேற்காடு பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்து பெண்கள் பலரும் ஷோபனாவின் காரை மறித்து அவரிடம் ஆனந்தமாக பேசியதுடன் ஷோபனாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். இதன் வீடியோவை ஷோபனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட இணையதள ரசிகர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.