
விரைவில் வருகிறது மெட்டி ஒலி 2 : இயக்குநர் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் 90கள் காலக்கட்டத்தில் சூப்பர் ஹிட் அடித்த குடும்பத் தொடர் என்றால் மெட்டி ஒலி தான். அதன்பின் தமிழ் சின்னத்திரையில் இன்று வரை எதார்த்த மனிதர்களின் கதையை சொல்லும் ஒரு தொடர் வந்தது இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த தொடரின் 2 வது பாகம் தற்போது உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தொடரை திருமுருகன் இயக்கப் போவதில்லை எனவும் சினி டைம்ஸ் தயாரிக்கும் இந்த இரண்டாவது பாகத்தை இயக்குநர் விக்ரமாதித்யன் என்பவர் தான் இயக்கவிருப்பதாகவும் தெரிய வருகிறது. மேலும், முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களிடமும் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.