சரத் பவார் அணிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி–சரத்சந்திர பவார்’ என்ற புதிய பெயர் அளிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏ.க்கள் அஜித் பவார் தலைமையில், சிவ சேனா ஷிண்டே பிரிவு மற்றும் பாஜக கூட்டணியில் கடந்தாண்டு ஜூலை மாதம் இணைந்து மகாராஷ்டிரா அரசில் அங்கம் வகித்தனர்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. பெரும்பான்மையுடன் திகழும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து தனது அணிக்கான பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி சரத் பவாரிடம், இந்திய தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம், சரத்பவாருக்கு நேற்று முன்தினம் அனுப்பிய கடிதத்
தில், தங்களது முதல் விருப்பமான என்சிபி-சரத்சந்திர பவார் என்ற பெயரை தேர்தலுக்கு ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அவரது அணிக்கு தேசியவாத காங்கிரஸ் – சரத்சந்திர பவார்’’ என்ற பெயர் கிடைத்துள்ளது