புதுச்சேரி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு பஞ்சு மிட்டாய் விற்க தடை விதித்துள்ளார். தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் பல இடங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர். சோதனையில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு […]
