ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்து இருப்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. லால் சலாம் படத்துக்கு தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோ இல்லையென்றாலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் லால் சலாம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை டிவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN
— Rajinikanth (@rajinikanth) February 9, 2024
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு படம் வெற்றி அடைய ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.