சம்பாதித்த பின் அரசியலுக்கு வரட்டும் : விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி

நடிகர் விஷால் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட களம் இறங்கினார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவரால் போட்டியிட முடியவில்லை. விரைவில் அரசியல் கட்சி தொடங்க போவதாக செய்தி வந்தது. ‛‛காலம் தான் முடிவு செய்யும். தேவைப்பட்டால் மக்களுக்காக குரல் கொடுப்பேன்'' என அறிக்கை வெளியிட்டார் விஷால்.

இந்த நிலையில் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி கூறுகையில், விஷாலுக்கு சிறிய வயதில் இருந்தே ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டு. தன்னிடத்தில் பணம் இல்லை என்ற போதும் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவி செய்வார். தற்போது தனது தாயார் தேவியின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவி செய்கிறார். தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்தில் உள்ளார். கண்டிப்பாக விஷால் அரசியலுக்கு வருவார். அரசியலில் ஜெயித்து காட்டுவார். அதேசமயம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு விஜய், அஜித், சூர்யா போன்று நிறைய சம்பாதிக்க வேண்டும். திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும். அதன்பிறகு, தான் சம்பாதித்த பணத்தை வைத்து அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதுதான் எனது ஆசை'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.