திருவள்ளுர்: தை பிரமோற்சவத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில். புகழ்பெற்ற இந்த ஸ்தலத்தில், ஆண்டுதோறும் தை மாத பிரம்மோற்சவ விழா10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இதையொட்டி தினசரி சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும். காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வைத்திய வீரராகவா் […]